முறைத்து பார்த்ததாக கூறி பீட்சா டெலிவரி பெண்ணுக்கு அடி உதை..!
மத்திய பிரதேசம் இந்தூரில் முறைத்து பார்த்ததாக கூறி பீட்சா டெலிவரி பெண்ணை நான்கு பெண்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.பீட்சா டெலிவரி பெண் நான்கு பெண்களை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது.
குச்சியால் தாக்கிய பெண்களிடம் இருந்து தப்ப டெலிவரி பெண் அருகிலிருந்த வீட்டிற்குள் சென்றார். வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில் வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






