--- --:--:-- --

கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தொடங்கப்படுகிறது தனியார் ரயில் சேவை..!

6

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் கோவை முதல் சீரடி வரை இன்று தொடங்கப்படும் தனியார் ரயில் சேவைக்கு இரு மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாமானியர்களின் பொருத்தமான தொடர் வண்டிப் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தனியார் தொடர்வண்டி இயக்கப்பட உள்ளது.

 

கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் தனியார் தொடர்வண்டி தண்டவாளம் நடைமேடை என அனைத்தும் இந்திய தொடர்வண்டி துறைக்கு சொந்தமானது. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

 

பயணிகளுக்கான போர்வை, துண்டு, பற்பசை ஆகியவற்றின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தனியார் தொடர் வண்டியில் பயணிப்பதற்கு விற்கப்படும் உணவிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon