3 குழந்தைகள் கட்டாயம் என தம்பதிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு..!
மக்கள் தொகை வளர்ச்சியில் சரிவை எதிர்கொண்டிருக்கும் சீனா வலுக்கட்டாயமாக குழந்தை பெற்றுக் கொள்ள தம்பதிகளை நிர்பந்திக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா 1979ஆம் ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான ஒரு குழந்தை திட்டத்தை அமல்படுத்தியது. திருமணமான தம்பதியினர் கண்காணிக்கப்பட்டனர். இரண்டாவது குழந்தைக்கு கருத்தரித்தால் அதனை வலுக்கட்டாயமாக கலைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் கோடிக்கணக்கான கருக்கலைப்புகள் அங்கு அரங்கேறின. இதன் விளைவு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஒருபுறம் உழைக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை சரிய தொடங்கியது.
இதனால் வரும் காலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான மனித சக்தி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயத்தை சீனா எதிர்கொண்டுள்ள நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை அரசு கைவிட்டது. தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்றது. இருப்பினும் இந்த நிலையில் தற்பொழுது மூன்று குழந்தைகள் கட்டாயம் என்று தம்பதிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





