--- --:--:-- --

சமாதியில் தான் இருக்கிறேன் எனக்கூறும் நித்தி..!

8

சமாதியில் தான் இருக்கிறேன் எனவும், ஆனால் சீக்கிரமே உங்களை சந்திப்பேன் என்று விளக்கம் கொடுத்து அதன் மூலம் தன் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் நித்யானந்தா. கடந்த சில நாட்களாக நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து செய்திகள் உலா வரும் நிலையில் அவரின் சீடர்கள் பலரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

 

மருத்துவர்கள் சிகிச்சை தருகிறார்கள் இட்லி கூட சாப்பிட முடியவில்லை என்று பரபரப்பு காணப்பட்டது. நித்தி கோமாவில் இருக்கிறார், கிட்னி பழுது என செய்திகளும் அடுத்தடுத்து வந்தன. அதற்கேற்றார் போல் சிஷ்யைகளும் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்திவந்தனர்.

 

இந்த நிலையில் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நித்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய உடல் நிலை நன்றாக இருக்கிறது எனவும் விரைவிலேயே உங்களை வந்து சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon