--- --:--:-- --

பூச்சி இருந்த சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு..!

7

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கன்வாடியில் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டனர்.

 

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அங்கன்வாடி மையத்தை சோதனை செய்ததில் சத்துணவில் பூச்சி இருந்ததால் அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளதாக கூறினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon