--- --:--:-- --

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு..!

1

உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாய்க்கு குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

இதனால் சென்னையில் இந்த வகை சிலிண்டரின் விலை 2,373 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 455 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon