--- --:--:-- --

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை..!

2

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புர்காம் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோபால்பூரா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நிகழ்த்தினார்.

 

இதில் சம்பாவை சேர்ந்த 36 வயதான ரஜினிபாலா என்னும் ஆசிரியை படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பட்கா மாவட்டத்தில் அரசு ஊழியரும், காஷ்மீர் பண்டித்துமான ராகுல் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon