இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ்..!
மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுக்கு முன்பே வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழை மறந்துவிட்டு சென்றுள்ளார்.
அதனை கண்டெடுத்த மற்றொரு பயணி சான்றிதழை ரயில் நிலைய மேலாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் பகிரப்படவே சான்றிதழுக்கு உரியவர்கள் அதை ரயில் நிலையம் வந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்ட சான்றிதழ்தான் தற்பொழுது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும், இறந்த வருடம் 1999 எனவும், இறப்பு சான்றிதழ் வழங்கிய தேதி 1990 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மூதாட்டி இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஒருவர் இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





