--- --:--:-- --

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு..!

1

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணி முதல் ஒன்றரை மணி வரை ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

 

இதில் அரசு அறிவித்த திட்டங்களின் நிலவரம், சட்டப்பேரவை அறிவிப்புகள் ஆகியவற்றின் நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். அமலாக்கத் துறை மூலம் நடத்தப்படும் ஆய்வு கூட்டத்தில் நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துணை செயலாளர்கள் உடன் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

 

கூட்டுறவு மற்றும் கல்வி ஊரக வளர்ச்சி, சமூக நலம் உள்ளிட்ட துறை செயலர்கள் உடன் ஆய்வு செய்கிறார். அனைத்துத்துறை செயலர்களும் துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்கம் அளிக்க உள்ளனர். பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் எழுப்புவார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon