--- --:--:-- --

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசம்..!

3

மிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

தற்பொழுது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon