ரேக்ளா பந்தயத்தை வேடிக்கை பார்த்தவரை முட்டிய காளை..! உயிரிழந்த சோகம்..!
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின் போது வண்டிகள் வரும் பாதையில் வாகனத்துடன் நின்று இருந்தவரை காளை முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 150 மாட்டுவண்டிகள் பங்கேற்புடன் கோலாகலமாக தொடங்கிய பந்தயத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்தது .
சாலை ஓரமாக நின்ற பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த மாட்டு வண்டி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் கொம்பு குத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.





