--- --:--:-- --

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!

1

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து கொரொனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக கட்டுப்பாடுகளை கட்டாயமாக்குவது குறித்து கூட்டத்தில் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

 

கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும்உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் இன்று ஆலோசிக்க உள்ளார்.

 

Right Menu Icon