--- --:--:-- --

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளை சாவடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.!

4

வேலூர் மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன . திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளியான இருபத்தொரு வயது பாலாஜி கடந்த 17ஆம் தேதி இரவு சோளிங்கர் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

அதில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி மூளைச் சாவடைந்தார். இதனையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்ததையடுத்து இருதயம், சிறுநீரகம், கண்கள், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

 

அவரது இருதயம் சென்னையில் ஒரு மருத்துவமனைக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகமும் மற்ற இரண்டு கண்களும் மற்றொரு சிஎம்சி மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon