தோழியை திருமணம் முடிக்க ஆணாக மாறிய பெண்ணுக்கு நடந்த சோகம்..!
தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய இளம்பெண்ணை திருமணம் செய்த தோழியே ஏமாற்றி நடுத்தெருவில் தவிக்கவிட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெயசுதா மற்றும் செந்திலா ஆகிய இளம்பெண்கள் நட்புடன் பழகியுள்ளனர்.
இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இரண்டு பெண்கள் திருமணம் செய்தால் யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதற்காக இளம்பெண் ஜெயசுதா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையும், ஹார்மோன் ஊசியும் செலுத்தி ஆணாக மாறி தனது பெயரை ஆதிசிவன் என மாற்றிக் கொண்டுள்ளார்.
அதன்பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த செய்தி செந்திலாவின் வீட்டிற்கு தெரிந்த நிலையில் பெற்றோர் சென்று தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செந்திலா தனக்காக திருநம்பியாகிய சுதாவை விட்டு விட்டு தனது பெற்றோருடன் செல்வதாக கூறி சென்றுள்ளார் திருநங்கையாக மாறிய ஜெயசுதாவை விட்டுவிட்டு தனது பெற்றோருடன் செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆணாக மாறிய ஜெய சுதாவை அவரது வீட்டிலும் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக தோழியை திருமணம் செய்ய திருநம்பியாக மாறிய ஜெயசுதா நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





