--- --:--:-- --

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் கைது..!

2

சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டார். கோடம்பாக்கத்தை சேர்ந்த நபர் பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூரில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாகயோகா சொல்லிக் கொடுத்துள்ளார்.

 

அப்போது அவர் மாணவிகளிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சந்தானம் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் சந்தானம் முறையான யோகா பயிற்சி பெறாமல் போலியாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வந்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon