தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்..!
Dead body in a mortuary
திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் கை, கால்களை கட்டியபடி ஒருவர் கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்பொழுது அவரது நண்பரான சதீஷ் என்பவரை வனப்பகுதியில் வைத்து தாக்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த பகுதி மக்கள் வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷ் தலை துண்டாக கிடந்துள்ளது.
15 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி வழிப்பறி செய்து விட்டதாகவும் தன்னை தாக்கியதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





