--- --:--:-- --

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..!

7

சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாததால் சலசலப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கியின் மண்டல இயக்குனர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

 

பின்னர் நிகழ்ச்சியிலிருந்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என சிலர் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டார்.

 

இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த உறுதி செய்யப்படும் என்று வங்கியின் உயர் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon