--- --:--:-- --

காதலனின் தாயை தாக்கிய பெண் வீட்டார்..!

6

விருதுநகரில் காதல் விவகாரத்தில் காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பெண் வீட்டார் தாக்கியுள்ளனர். அருப்புக்கோட்டை அருகே சக்தி சிவா, புவனேஸ்வரி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்ப்பால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சக்தி சிவாவின் வீட்டிற்கு சென்று புவனேஸ்வரியின் தாய் சுதா மற்றும் உறவினர்கள் சக்தி சிவாவின் தாய் மீனாட்சியை தரதரவென இழுத்து வந்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை தாக்கியதாக பெண்ணின் உறவினர்கள் 14 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனாட்சியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன் மறியலில் ஈடுபட்டனர்.

 

அவர்களை சமரசம் செய்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon