--- --:--:-- --

கார் யு டர்ன் வீடியோவில் மறைக்கப்பட்ட உண்மை..!

4

தற்பொழுது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காரை இலாவகமாக திரும்புகின்ற டிரைவரை பலரும் பாராட்டுகின்றனர். ட்விட்டர் தளத்தில் மட்டுமே சுமார் 1.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்து இருந்த நிலையில் ஒரு சில பயனர்கள் இந்த வீடியோ உண்மையானது தானா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

 

அவர்கள் கேள்வி எழுப்பியதை போல என்னதான் அனுபவமிக்க ஓட்டுநராக இருந்தாலும் அதை செய்வது எளிய காரியமில்லை. அந்த வீடியோ மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு குறுகிய சாலையில் எடுக்கப்பட்டதை போல கேமராவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.

 

அதன் ஒரிஜினல் வீடியோவை யூட்யூப் தளத்தில் பதிவிட்டுள்ளனர். வேறு ஒரு ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அந்த சாலைக்கு கீழே மாற்று சாலை இருப்பது பதிவாகியுள்ளதாக காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon