--- --:--:-- --

தமிழ்நாட்டில் ஊரடங்கு குறித்து நாளை முக்கிய முடிவு..!

3

தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை மருத்துவக் குழுவுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரொனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.

 

தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

 

கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

வரும் 31ம் நாள் தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் நாளை கலந்தாய்வு நடத்த உள்ளார். ஊரடங்கு அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றிய கலந்தாலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon