தேனியில் சினிமா பாடலுக்கு செவிலியர்கள் ஆட்டம் ..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் பணியின் பொழுது சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செவிலியர், கண்காணிப்பாளர், ஆண் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் அனைவரும் கைகோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பணியாளர்கள் மன சோர்வை போக்குவதற்காக நடனமாடியதாக தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடனம் ஆடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





