சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி..!
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கொடிகட்டி பறக்கிறார்.
மெரினா படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக மாறிவிட்டார். போன வருடம் சிவகார்த்திகேயன் நடித்து டாக்டர் படம் 100 கோடி ரூபாய் கலெக்சன் செய்தது.
அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் தான் படம் டான் விரைவில் வெளியாகப் போகிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





