--- --:--:-- --

முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாகரத்து..!

8

முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாகரத்துக் கோரியுள்ள சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள்தான் அந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. விவாகரத்து கேட்டு அதிர வைத்துள்ளார்.

 

என்ன நடந்தது என்று ஆங்கில இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் மணப்பெண் நான் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை அதேசமயம் திருமணத்தை எதிர்க்கவும் இல்லை.

 

எனது காதலன் திருமணத்தை முன்மொழிந்த பொழுது நான் அதனை எதிர்க்கவில்லை நாங்கள் ஒவ்வொருவரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதில் பாதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு நான் வைத்த ஒரே நிபந்தனை திருமணத்தன்று எனது முகத்தில் கேக் பூசக் கூடாது என்பதுதான்.

 

ஆனால் அவரோ என் தலையின் பின்புறம் பிடித்து என் முகத்தை பூசிவிட்டார். எனவே விவாகரத்து கூறியுள்ளதோடு ஜனவரி மாத இறுதிக்குள் விவாகரத்து கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon