தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம்..!
தமிழகம் முழுவதும் 600 இடங்களில் முதலாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற சமுதாய நல மையங்கள் உள்ளிட்ட 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம் மட்டுமின்றி சனிக்கிழமை தோறும் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





