--- --:--:-- --

அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா..!

3

பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு பள்ளியில் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

 

இந்த பள்ளியில் கேரள பகுதியில் இருந்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் மூன்று பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .இதையடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 

மேலும் பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்குமான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon