--- --:--:-- --

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!

2

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்டு செரிமானமாகாமல் தவித்ததாக கூறப்படுகிறது. கர்ப்பிணியின் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தன.

 

அறந்தாய் என்று அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ஐந்து மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வது தெரியவந்தது.

 

திங்கள்கிழமை இரவு அழகாய் பரோட்டா சாப்பிட்டார் என்று தெரியவருகிறது. சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்த அவர் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon