--- --:--:-- --

ஒமிக்ரானை தடுக்க கூடுதலாக டோஸ் போட வேண்டுமா..?

2

கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாலும் அதனால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கவும் மக்களுக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசிகளை தேசிய தொழில்நுட்பக் குழு இன்று சந்தித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

 

கூடுதலாக பூஸ்டர் டோஸ் போடலாமா என்பது பற்றி இந்த குழுவில் நிபுணர்கள் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அதேபோன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பூஸ்டர் டோஸ் என்பது முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தடுப்பு திறன் குறைவதை சமாளிக்க காணப்படுவதாகவும் ஆனால் கூடுதல் டோஸ் என்பது தடுப்பூசி போட்ட பிறகு கொரொனாவுக்கு எதிரான நோய் தடுப்பு திறனை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்கு போடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon