--- --:--:-- --

கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு..!

3

கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அங்கு புதிய வகை வைரஸ் பரவி வந்தது தெரியவந்தது.

 

மோசமான குடிநீர் மூலமே இந்த வைரஸ் பரவுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

 

இந்த நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கும் தலைவலியும் இருந்தது அவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதில் 54 மாணவிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுபோல் அந்த விடுதியில் பணியாற்றி வந்த மூன்று ஊழியர்களுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பாதிப்புக்கு ஆளான மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதனிடையே திருச்சூரில் கல்லூரி மாணவிகள் விடுதி அமைந்துள்ள பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon