--- --:--:-- --

நடிகை நக்மா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம்..!

4

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் மகளிர் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

 

வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

இந்த நிலையில் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதை கண்டித்து அம்மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 

காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலாளர் நக்மாதலைமையில் ஏராளமான பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்பொழுது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தடுப்பு மீது ஏறி கண்டனங்களை எழுப்பினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon