--- --:--:-- --

பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிப்பு..!

2

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடையில் வாங்கும் பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்பூர் பிரியாணி கடை இயங்கி வருகிறது.

 

இந்த கடையில் இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. மற்றுமொரு அறிவிப்பாக வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்ற சலுகையை அறிவித்து விற்பனை செய்து வருகிறது.

 

இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வழங்கப்படுவதாக ஆம்பூர் பிரியாணி கடை அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon