மக்கள் தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை : பாத்திமா ஷனா
தனக்கும் அமீர்கானுக்கு தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை தான் விரும்பவில்லை என்று நடிகை பாத்திமா ஷனா ஷேக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தான் இதுவரை சந்திக்காத சில பேர் தன்னை பற்றி எழுதுகிறார்கள் என்றும் இதில் உண்மை இருக்கிறதா என கூட அவர்களுக்கு தெரியாது எனவும் கூறினார்.
இதைப் படிப்பவர்கள் தான் நல்லவர் இல்லை என நினைக்கின்றனர். அந்த நபரிடம் தன்னை பற்றி கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் தருகிறேன் என்று சொல்ல வேண்டும் என நினைக்க தோன்றுவதாகவும் தெரிவித்தார். மக்கள் தவறாக கருதுவதை தான் விரும்ப வில்லை என நடிகை தெரிவித்துள்ளார்.






