ஆம்புலன்ஸ் வாகனத்தை துரிதமாக இயக்கி நோயாளியை காப்பாற்றிய ஓட்டுனர்..! குவியும் பாராட்டு..!
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை துரிதமாக இயக்கி நோயாளியை காப்பாற்றிய ஓட்டுனரை பலரும் பாராட்டி வருகின்றனர். கடலூர் சாலை மார்க்கத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த நபரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதனையடுத்து அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள சிறிய தடுப்பு சுவர் மீது ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்றி சாலையில் எதிர்த் திசைக்குச் சென்று காயமடைந்த நபரை பத்திரமாக அனுமதித்துள்ளனர்.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது அதனை கண்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் டிரைவரை பாராட்டி வருகின்றனர்.






