கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
இன்று கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






