ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்..!
இணையதளத்தில் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரவுடி பேபி சூர்யா டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர். யூடியூப் இணையதளத்தில் ஆபாசமாக பேசி வருவதாக ஏற்கனவே பலர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் பேசி வருவதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்ச்சைக்குரிய வீடியோக்களை அழிக்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்து கட்சி சார்பில் புகார் அளித்துள்ளனர்.






