சூட்கேஸில் வைக்கப்பட்டு ஓடைக்கால்வாயில் வீசப்பட்ட குழந்தை..!
ராணிப்பேட்டை மாவட்டம் மாணவரம் அருகே குழந்தை சூட்கேஸில் வைக்கப்பட்டு ஓடைக்கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரமாக ஓட கால்வாயில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.
சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று கிடந்தது. கிராம மக்கள் தொடர்ந்து பார்த்தபொழுது சூட்கேசில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த வருவாய்த்துறை அதிகாரிகள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.






