கதவுச்சட்டத்தைப் பிடித்து விளையாடிய சிறுமி உயிரிழப்பு..!
தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்துக்கொண்டு விளையாடிய போது அது சாய்ந்ததில் 17 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது.
சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். முகப்பு கதவை பொருத்துவதற்காக கதவு சட்டம் சாய்க்கப்பட்டு சுவற்றின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கதவு சட்டத்தின் தலை பகுதியை பிடித்து தொங்கியவாறு ஸ்ரீதரின் 7 வயது மகள் ப்ரீத்தி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கதவு குழந்தை மீது சாய்ந்து உள்ளது. இதில் தலையில் அடிபட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை இறப்புக்கு காரணமான கதவு சட்டத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.







