--- --:--:-- --

கை வெட்டப்பட்ட நிலையில் தலைகீழாக தொங்கும் சடலம்..!

13

ரியானா மாநிலம் குத்திலியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்திற்கு அருகே ஒரு கை வெட்டப்பட்டு சடலம் தலை கீழாக தொங்க விடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்திற்கு அருகே ஒரு சடலம் தலைகீழாக தொங்க விடப்பட்டுள்ளது.

 

சடலத்தின் மணிக்கட்டுப் பகுதி வெட்டப்பட்டு இருப்பதுடன் கால்பாதம் முறிந்த நிலையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிஎஸ்பி அரசு ராஜ் இந்த நிகழ்வு குறித்து முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Right Menu Icon