தடம் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடக்கம்..!
தமிழில் வெற்றியடைந்த தடம் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் தடம். அந்தாண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான படத்தை நடிகர்களும் ரசித்தனர்.
இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. ஆதித்யா ராய் கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.







