நடுரோட்டில் ஹிந்தி பாடலுக்கு ஆட்டம் போட்ட பெண்..! காரணம் என்ன..?
நடுரோட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்து ஆட்டம் போட்ட இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர பெண்களின் திறமையும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இளம்பெண் ஒருவரின் நடனமும் அமைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் பரபரப்பான சாலையில் தைரியமாக அந்த இளம்பெண் ஒரு ஹிந்தி பாடலுக்கு திடீரென நடனமாடியுள்ளார்.
எதற்காக அந்த இளம்பெண் நடனமாடினார் என தெரியாத நிலையில் இந்த வீடியோவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரேயா என்ற பெண் தயவுசெய்து சாலை விதிகளை மீறி சிவப்பு சிக்னலனில் நீங்கள் வாகனங்களை நிறுத்துங்கள்.
முக கவசத்தையும் அணியுங்கள் என கூறியுள்ளார். இந்த நடனம் விழிப்புணர்வுக்காக அமைந்திருந்தாலும் நடனமாடிய இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அந்த மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இளம்பெண்ணின் நடனத்தை பாராட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





