45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
20 மாதங்களுக்கு பிறகு 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதி அமைச்சர்கள் நேரில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த சட்டத்தில் உள்ள குறை நிறைகளை குறித்து விவாதிப்பதற்காக கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களுக்கானவரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.
தொற்றால் கடந்த 20 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வந்த இந்த நிலையில் இன்று மாநில அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொள்ள 45வது கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்கிறார். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






