திருப்பூரில் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!
திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதேபோல் அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.






