திருமணமான ஏழாவது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருமணமான ஏழாவது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அன்பரசி என்ற அந்தப் பெண்ணுக்கும் கேவி குப்பத்தை சேர்ந்த ராமானுஜம் என்பவருக்கும் கடந்த மாதம் எட்டாம் தேதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு விருந்துக்காக தாய் வீட்டிற்கு கணவருடன் வந்திருந்தவர் இன்று அதிகாலை வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






