புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரொனா தொற்று..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 5 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






