பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி வந்த விவகாரத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா..?
மதுரை பீபீ குளம் பகுதியில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி வந்த விவகாரத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் தலையை கைப்பற்றி மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் குழந்தையின் தலை சாக்கடை நீரில் நனைந்ததை போல் இருந்ததால் தலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் குழந்தையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




