--- --:--:-- --

பெண்களை தாலிபன்கள் சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல்..!

11

போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை தாலிபன்கள் சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை 1996 இல் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபோது ஆப்கன் பெண்கள் கட்டுப்பாட்டுக் ஆளாக்கப்பட்டனர்.

 

ஆனால் இந்த முறை இஸ்லாமிய ஷரியத் சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில் அமைச்சரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்காக காபூலில் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது தாலிபன்கள் அவர்களை சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல் வெளியாக உள்ளது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் வீடுகளுக்கு திரும்புமாறு மிரட்டி விரட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon