காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் சென்ற பாம்பை பிடித்த வனத்துறையினர்..!
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் சென்ற பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். காவல் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலில் பாம்பு ஒன்று ஓடியது. இதனைக்கண்ட காவலர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை காவலர் வினோத் என்பவர் 5 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து சென்றார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இரண்டு பாம்புகள் சிக்கியுள்ளன.






