பதவி வேண்டாம், காதலன் தான் வேண்டும் எனக்கூறிய இளவரசி..!
ஜப்பான் பட்டத்து இளவரசர் விக்கி மனோவின் மகள் இளவரசி நகோர். இவர் அரச குடும்பத்தைச் சாராத ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் அதிகாரபூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்ட நிலையில் அவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளதால் இளவரசியும் அமெரிக்காவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் அரச குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை அரச குடும்பத்தினர் ஒருவர் திருமணம் செய்தால் அரசு பட்டத்தை இழக்க நேரிடும். ஆனால் அரசு குடும்பத்தை சேர்ந்த பெண் என்றால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். அதன்படி இளவரசிக்கு இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி ரூபாய் இழப்பீடாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தேவையில்லை எனக்கூறி இளவரசி மறுத்துவிட்டார்.






