--- --:--:-- --

தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை..!

4

வேலூர் அருகே தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் அடுத்த மேல்மொத்த குடி பகுதியில் நிலத்தகராறில் கணவன் மனைவியை வெட்டிய வழக்கில் சத்யராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

அப்பொழுது சிறைக்கு அவரை அழைத்து சென்ற பொழுது சத்யராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

 

அதே நேரம் கைதி தப்பியோடிய பொழுது பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சங்கர், முதல் நிலை காவலர்கள் ஜலாலுதீன் ஆகிய மூன்று காவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon