32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!
குஜராத் மாநிலம் வதோதராவில் 32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 6 பேரை 20 நிமிடங்களில் போலீஸ் மோப்பநாய் அடையாளம் காட்டியது.
18 மாதமேயான டாபர்மேன் இனத்தை சேர்ந்த பெண் நாய் சாவா குற்றம் நடந்த இடத்திற்கு மோப்பம் பிடிக்க கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த பெண்ணின் துப்பட்டாவை ஒரு பாட்டிலில் பிடித்து வடக்கு நோக்கி ஓடத் தொடங்கியது ஜாவா.
காவலர்கள் பின்தொடர வயல்களை கடந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாவா அகமதாபாத் மும்பை நெடுஞ்சாலையில் ரயில் பாதையில் இருந்து கூடாரங்களில் ஒரு கூடாரத்தை அடைந்து அங்கிருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.






