எஜமானரை காப்பாற்ற போராடிய நாய் உயிரிழப்பு..!
கோவையில் எஜமானரை காப்பாற்ற போராடிய நாய் ஒன்று தனது உயிரை கொடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைலட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் இவர். பொமேரியன் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அந்த நாய் நீண்ட நேரமாக குறைத்து கொண்டு இருந்ததை கண்ட சுரேந்தர் தாயார் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது நான்கடி நீளம் உள்ள பாம்பு ஒன்று காருக்கு அடியில் சென்று உள்ளது. அதை பார்த்து மீண்டும் அந்த நாய் குரைத்துக் கொண்டே காரின் அருகில் இருந்த பாம்பின் வாலை பிடித்து இழுத்து உள்ளது.
அப்பொழுது திடீரென பாம்பு கொத்தியது. அந்த நாய் துடிதுடித்து இறந்தது. எஜமானரை காப்பாற்றிய நாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







